சுரைக்காய் பொரியல்
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
சுரைக்காய்கால் கிலோ
வெங்காயம் 2
கடுகுஅரை டீஸ்பூன்
மிளகாய் வற்றல்1
கறிவேப்பிலை 1 கொத்து
உளுத்தம் பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்1
மஞ்சள் தூள்கால் டீஸ்பூன்
துருவிய தேங்காய்கால் கப்
கொத்தமல்லி1 கைப்பிடி
எண்ணெய் தேவைக்கேற்ப
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து தாளித்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் மிளகாய் வற்றல் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி பின் சுரைக்காய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி தண்ணீர் கொஞ்சம் ஊற்றி சுரைக்காய் வெந்தது தண்ணீர் முற்றிலும் வற்றியதும், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லியை தூவி பிரட்டி இறக்கவும்.
இப்போது சுவையான சுரைக்காய் பொரியல் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : தயிர் சாதம், ரச சாதம் சாம்பார் சாதத்துடன் வைத்து சாப்பிடலாம்

Comments
Post a Comment