கோவக்காய் சட்னி|KOVAKAI SATTINI|SAMAYAL

 கோவக்காய் சட்னி

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
கோவக்காய் கால் கிலோ
வெங்காயம்5
பூண்டு பல்4
காய்ந்த மிளகாய் 4
பச்சை மிளகாய்3
தனியா1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் 1 டீஸ்பூன்
புளி எலுமிச்சை அளவு
உப்பு தேவைக்கேற்ப
எண்ணெய் தேவைக்கேற்ப
கடுகு அரை டீஸ்பூன்
செய்முறை :

  வெங்காயத்தை நீளமாக நறுக்கி கொள்ள வேண்டும்.

  கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.

  ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய கோவக்காய், வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், வெந்தயம், முழு தனியா மற்றும் புளி எல்லாம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

  பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.

  கோவக்காயை நன்கு அலசி விட்டு இருமுனைகளையும் நறுக்கி எடுத்து விடவும். பிறகு நீள் வாக்கில் நன்றாக நறுக்கி கொள்ளவும்.

  கடுகு கறிவேப்பில்லை தாளித்து சேர்க்கவும். சுவையான கோவக்காய் சட்னி தயார்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இட்லி, தோசைக்கு இது பொருத்தமாக இருக்கும். சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.


Comments