கோவக்காய் பொரியல்|KOVAIKAI PORIYAL|SAMAYAL

 கோவக்காய் பொரியல்


தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
கோவக்காய் அரை கிலோ
சின்ன வெங்காயம் 8
வரமிளகாய்2
மஞ்சள் தூள்அரை டீஸ்பூன்
சாம்பார் தூள்கால் டேபிள் ஸ்பூன்
கடுகுஅரை டீஸ்பூன்
எண்ணெய் தேவைக்கேற்ப
கறிவேப்பிலைஒரு கொத்து
கடலை பருப்புஅரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :

  கோவக்காயை நன்கு கழுவி, அதன் நுனிப் பகுதியை நறுக்கி விட்டு, வட்ட துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப் பருப்பு தாளித்து, நறுக்கிய சின்னி வெங்காயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  பின்பு கோவக்காயை போட்டு வதக்கி மஞ்சள் தூள், சாம்பார் தூள், உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்.

  அதனுடன் சிறிதளவு நீர் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். இடையிடையே நன்கு கிளறி விட்டு நீர் போதவில்லையெனில் மேலும் சிறிது நீர் விட்டு வேக விடவும்.

  நன்றாக வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் ரச சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும்.




Comments