கேரட் சூப்|KAYERT SUB|SAMAYAL

 கேரட் சூப்

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
கேரட்கால் கிலோ
சின்ன வெங்காயம்10
மைசூர் பருப்பு 100 கிராம்
பாசிப்பருப்பு 100 கிராம்
பால் அரை கப்
கொத்தமல்லி தழைஒரு கைப்பிடி
மிளகுத்தூள்1 டீஸ்பூன்
வெண்ணெய் 1 டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :

  கேரட், சின்ன வெங்காயம் ஆகியவற்றை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  குக்கரில் வெண்ணெயை உருக்கி, நறுக்கிய வெங்காயம், கேரட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

  மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு, 300 மில்லி லிட்டர் தண்ணீர் சேர்த்து, குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

  குக்கரில் ஆவி அடங்கியதும், பருப்பை வடிகட்டி, அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர;, பருப்பை வேகவைத்த தண்ணீருடன் அரைத்த பருப்புகளைச் சேர்த்து, உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விடவும்.

  பிறகு இதனுடன் காய்ச்சிய பால், மிளகுத்தூள், கொத்தமல்லி தழை ஆகியவைச் சேர்த்து 1 நிமிடம் கழித்து இறக்கவும்.




Comments