கேரட் கேசரி|KAYERET KAYSERI|SAMAYAL

 கேரட் கேசரி

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
கேரட் அரை கிலோ
பால் 1 கப்
பேரீச்சம் பழம்10
கோதுமை மாவு2 டீஸ்பூன்
சர்க்கரைகால் கப்
தேங்காய் துருவல்கால் கப்
லவங்கம் 3
நெய் 2 டீஸ்பூன்
வறுத்த முந்திரிப்பொடி1 டீஸ்பன்
செய்முறை :

  பேரீச்சம் பழங்களின் கொட்டையை நீக்கி விட்டு அதில் கேரட் துருவலைச் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைக்க வேண்டும்.

  நெய் விட்டு கோதுமை மாவை பொன் நிறமாக வறுக்க வேண்டும்.

  பாலை, பால்கோவா பதத்தில் காய்ச்ச வேண்டும்.

  பின்னர; கேரட் தேங்காய்த்துறுவல் இரண்டையும் சேர்த்து மையாக அரைக்க வேண்டும்.

  அடிகனமான பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சர்க்கரையைப் இவற்றில் போட்டு பாகானவுடன் மற்ற எல்லா பொருள்களையும் போட்டு அடிபிடிக்காமல் கெட்டியாகச் கிளறவும்.

  கேசரி பதம் வந்தவுடன் தட்டில் நெய் தடவி அதில் கொட்டி, மேலே முந்திரியை வறுத்து தூவினால் சுவையான கேரட் கேசரி ரெடி.



Comments