அவரைக்காய் மசாலா|AVARAKAI MASALAA|SAMAYA

 அவரைக்காய் மசாலா

தேவையான பொருட்கள் :

பொருள் - அளவு
அவரைக்காய்கால் கிலோ
மிளகாய்தூள் 2 டேபுள் ஸ்பூன்
மஞ்சள்தூள்அரை டீஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப
தண்ணீர் தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலை1 கொத்து
அரைப்பதற்கு:
தேங்காய் துருவல் - 1 கப், சீரகம் - 1 டீஸ்பு+ன்

தாளிக்க :
கடுகு - 1 டீஸ்பூன், உளுந்து - 1 டீஸ்பூன்
பொpய வெங்காயம் - 1, தக்காளி - 1, பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை - ஒரு கொத்து
எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :

   தேங்காய் துருவல், சீரகத்தை அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெட்டிய வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிய பிறகு, அரைத்த மசாலாவை போட்டு நன்கு வதக்கி அதில் மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வறுக்கவும்.

   அதில் அவரைக்காய், உப்பு போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வேக விடவும். காய் வெந்ததும், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : ரச சாதம், தயிர் சாதம் மற்றும் சாதத்துடன் வைத்து சாப்பிட நன்றாக இருக்கும்.


Comments